யாழில் பெரும் சோகம் – 14 வயது மாணவன் பரிதாப மரணம்.!

0
224

யாழ் இந்துக்கல்லூரியின் 15 வயது மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 14 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலை, யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகவும் கொண்ட கிருபானந்தன் கிரிசிகன் எனும் குறித்த மாணவன் வீட்டில் மாரடைப்பு காரணமாக மரணமானதாகத் தெரியவருகின்றது.(FB)

இலங்கையில் கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதைவிட தற்பொழுது இந்த உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் உள்ளது.

மேலும், உடல் உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை, போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும் சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here