சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி; ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்.!

0
134

வேத ஜோதிடத்தில், சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் அசுரர்களின் குருவும் கூட. இந்த சுக்கிரனின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். எப்படி சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகிறாரோ, அதேப் போல் நட்சத்திரங்களையும் மாற்றுவார்.

அந்த வகையில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி ஏப்ரல் மாத இறுதியில் நிகழவுள்ளது. தற்போது சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 25 ஆம் தேதி அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் மே 05 ஆம் தேதி வரை இருப்பார். 10 நாட்கள் இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள்.

ஜோதிடத்தில் அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. இந்த கேதுவும், சுக்கிரனும் நட்புறவு கொண்டுள்ளதால், இந்த சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களின் தலைமைத்திறனை அதிகரிப்பதோடு, வெளியூர் பயணத்தை அதிகம் மேற்கொள்ள வைக்கும். அதோடு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கும். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியின் போது சுக்கிரன் மேஷ ராசியின் முதல் வீட்டில் இருப்பார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆளுமையில் நல்ல முன்னேற்றம் தெரியும். மேலும் நிதி ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதோடு, பணத்தை சேமிக்கவும் முடிவும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். உறவுகள் மேம்படும்.

கன்னி
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள். பணிபுரிவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here