மருதங்குளம் புனரமைக்கப்படாமையினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு-பி.உறுப்பினர் ஆ.ஜோன்சன் குற்றச்சாட்டு!

0
117

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள புத்துவெட்டுவான் கிராமத்தில் அமைந்துள்ள மருதங்குளம் புனரமைக்கப்படாமையினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளரும் துணுக்காய் பிரதேச இணைப்பாளருமான கிருசாகுமாரின் அழைப்பின் பேரில் புத்துவெட்டுவான் பிரதேச மக்களது பிரச்சனைகளை அறியும் நோக்கில் ஜனநாயக இளைஞர் அமைப்பின் தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆறுமுகம் ஜோன்சன் மற்றும் அமைப்பின் மாங்குளம் பிரதேச இணைப்பாளர் டேவிட் யேசுராஜ் மற்றும் பிரதேச சமூகமட்ட அமைப்பினர் ஆகியோர் புத்துவெட்டுவான் கிராமத்தில் உள்ள மருதன் குளத்திற்கும் சென்று குளம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடினார்கள். இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர்.

புத்துவெட்டுவான் கிராம மருதன் குளத்தினை புணரமைப்பு செய்வதன் மூலம் சிறுபோக விவசாயிகளது முக்கியமான தேவையினை பூர்த்தி செய்து பிரதேச மக்களது வாழ்வாதாரத்தினையும் நிலையாக பேண முடியும்.

குளமானது வான் கட்டு முற்றாக உடைந்துள்ளடன் சிறுபோகத்திற்கான தண்ணீரினை சேமித்து வைக்க முடியாதுள்ளது. குறிப்பாக இவ்குளத்தினை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் நன்னீர் மீன்பிடியாளர்கள் உள்ளிட்ட பிரதேச மக்கள் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு பயனடைய முடியுமென்றால் அவர்களுடைய வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை பிரதேச மக்களிடம் உள்ளதாகவும் ஜனநாயக இளைஞர் அமைப்பின் தலைவரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆறுமுகம் ஜோன்சன் தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட திணைக்களம் வடமாகாண ஆளுநர் நீர்ப்பாசன அமைச்சர் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிற்கும் குளத்தினை புணரமைப்பு செய்வதன் அவசியத்தையும் தேவையினையும் வலியுறுத்தியுள்ளார் பிரதேச சபை உறுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here