காரைநகர்-மாந்தை கிழக்கு அரச போக்குவரத்து இடைநிறுத்தலால் மக்கள் பெரும் சிரமம்!

0
71

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேசத்திற்கான காலைவேளையில் காரைநகரில் இருந்து மாந்தை கிழக்கு செல்லும் பேருந்து கொவிட் 19 தொற்றால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் அரச உத்தியோகத்தர்கள் மற்றம் பொதுமக்கள் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் ம.தயானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் 16.03.21 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச போக்குவரத்து சாலைகூட இதுவரை சேவையில் ஈடுபடவில்லை அண்மையில் கரைநகர் சாலையில்பணியாற்றுபவர்களுக்கு கொவிட் 19 உறுதி படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த சாலையின் போக்குவரத்துக்கள் சில மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு மாந்தை கிழக்கிற்கு செல்லும் பேருந்து தடைப்பட்டுள்ளதால் அரச உத்தியோகத்தர்கள்,பாடசாலை மாணவர்கள்,பொதுமக்கள் போக்குவரத்து சேவையினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு போக்குவரத்து சாலைக்கு ஆழணி பற்றாக்குறை காணப்படுவதாகவம் பேருந்துக்கள் போதியளவு இருந்தும் 15 ஓட்டுனர்கள் 15 நடத்துனர்கள் உள்ளிட்ட ஆழணி பற்றாக்குறை நிலவி வருவதாக முல்லைத்தீவு சாலையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here