முல்லைத்தீவு மாவட்டத்தில் 11ஆயிரத்தி 55 மில்லியன் ரூபா வேலைத்திட்டம்!

0
120

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தியில் தற்போது 11 ஆயிரத்தி 55 மில்லின் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 2019 ஆண்டு அநேகமான நிதிகள் கிடைக்கப்பெற்று ரி.எப்.ஆர் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் 83.4 மில்லியன் நிதி கிடைக்கப்பெறவேண்டியுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நூறுவீதமான வேலைத்திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சௌபாக்கிய உற்பத்திக்கிராமம்,விளையாட்டு மைதானத்திற்கான புனரமைப்பு,ஆயிரம் கிலோமீற்றர் பாதைபுனரமைப்பு, பெருவீதி அபிவிருத்தி,நீர்பாசன புனமைப்பு,தேசிய நீர்வளங்கள் அதிகரசபை நிதி ஒதுக்கீடு,மாகாணசபையின் நிதி ஒதுக்கீடு ஊடான புனரமைப்புக்கள் என அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட 11 ஆயிரத்தி 55 மில்லியன் பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதில் சியாப் திட்டம்,விவசாய மறுசீரமைப்புதிட்டம்,சௌபாக்கிய நீர்பாசன செளிப்பு என்கின்ற அபிவிருத்திட்டங்களுக்கான மதிப்பீடுகள் கிடைக்காத காரணத்தினால் உள்வாங்கப்படவில்லை என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here