உயரிய சபையில் எடுக்கப்படும் பிரேரணைகள் நிறைவேற்றப்படவேண்டும்-மோ.விக்னா!

0
88

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் வெற்றிடமாக காணப்பட்ட உறுப்பினர் பதவிக்கு தமிழர் விடுதலைகூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிட்ட மோ.விக்னா அவர்கள் தனது கன்னி பயணத்தினை இன்று 18.03.21 தொடங்கியுள்ளார்.

இன்று நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வின் போது புதிய உறுப்பினருக்கு தவிசாளர் க.தவராச அவர்களினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சபையின் அமர்வுகள் நடைபெற்று புதிய பிரதேச சபை உறுப்பினர் தனது கருத்துக்களை தெரிவிப்பதற்கு தவிசாளர் அவர்களால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது

இதன் போது கருத்து தெரிவித்த புதிய உறுப்பினர் மோ.விக்கினா உயரிய சபையில் ஒரு சிலர்தான் திரும்ப திரும்ப கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள் நான் வெளியில் இருந்து அவதானித்துவிட்டு இன்று ஒரு பிரதிநிதியாக அவதானிக்கின்றேன்.

வீதிகள் புனரமைக்க வேண்டும் கிராமங்களில் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை கள்ளப்பாடு,சிலாவத்தை எனது வட்டார கிராமத்தில் நான் குப்பை எடுப்பதைக்கூடா கணவில்லை இந்த தேவையினை உடனடியாக செய்யவேண்டும்.

வீதி விளக்கு தொடர்பில் கதைத்தார்கள் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டுள்ளன அவை ஒளிரவில்லை விளக்குகளின் உத்தரவாத்தில்தான் பிரச்சனை உள்ளதாக அல்லது பொருத்தியவர்களில்தான் பிரச்சனை இருக்கா என்பது தெரியவில்லை முல்லைத்தீவு நகரத்தில் கூட ஒழுங்கான மின்விளக்குகள் எரியவில்லை இது உண்மையில் அடிப்படை தேவை இதனை விட்டு வேறு பிரச்சினையினை கதைக்கின்றீர்கள்.

உயரிய சபையில் பிரேரணைகள் கொண்டுவருவது தவறு கிடையாது அது நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here