முல்லைத்தீவு அரச பேருந்து சாலையின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுமா!

0
97

முல்லைத்தீவு மாவட்ட அரச பேருந்து சாலையில் உள்ள பல்வேறு வளப்பற்றாக்குறையினால் மாவட்ட மக்களுக்கு அரச பேருந்து சேவையினை முழுமையாக வழங்கமுடியாதுள்ளதாக மாவட்ட சாலை பரிசோதகர் தெரிவித்துள்ள நிலையில்

18.03.21 அன்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளளர்.

முல்லைத்தீவு சாலையில் நிலவிவரும் மனிதவளம் மற்றும் ஏனைய வளப்பற்றாக்குறைகள் தொடர்பில் சாலை நிர்வாகத்தினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசபேருந்துசேவையின் பொதுபோக்குவரத்தில் 2011 ஆம் ஆண்டின் பின்னர் இன்றுவரை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பொதுபோக்குவரத்து சேவையினை வழங்கிவருவதாகவும் தற்போது 30 பேருந்துக்கள் இருந்தும் பணியாளர் பற்றாக்குறையே இடையூறாக இருக்கின்றது 15 சாரதிகளும் 15 காப்பாளர்களும் கிடைக்குமானால் முழுமையான சேவையினை ஆற்றமுடியும்.

முல்லைத்தீவு சாலையில் 7 பேருந்துக்கள் சேவையில் ஈடுபடாமல் உள்ளன மாவட்ட சாலையின் அபிவிருத்தி தொடர்பிலும் காப்பாளர்கள்,மெக்கானிக்,உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்றும் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here