புத்தளத்தினை சேர்ந்த 150 படகுகளுக்கு மாத்திரம் நாயாற்றில் அனுமதி!

0
84

புத்தளத்தினை சேர்ந்த 150 படகுகளுக்கு மாத்திரம் நாயாற்றில் அனுமதி-குழுஅமைத்து செயற்பாட்மை கண்காணிக்க இணக்கம்!

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தலைமையில் மாவட்டசெயல மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று 19.03.21 அன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் அமைப்புக்கள், கடற்தொழிலாளர் சமாசாம்,சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள்.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள பணிப்பாளர் நாயம் எஸ்.ஜே.கஹவத்த,கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்று பகுதியில் புத்தளத்தில் இருந்து வருகை தரும் மீனவர்களின் வருகையினை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக தீர்;க்கமுடியாத பிரச்சனை 2012 ஆம் ஆண்டு 30 கறுக்குப்பனையினை சேர்ந்த 30 படகுகளுக்கு நாயாற்றில் அனுமதி கொடுக்கப்பட்டு அடுத்தடுத்து படகுகளுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள் சிறுதொழிலை வாழ்வாதாரமாக கொண்டு தொழில் செய்வர்கள் கறுக்குப்பனையில் இருந்து வருபவர்கள் சிறுதொழிலுடன் தடைசெய்யப்பட்ட தொழிலை செய்பவர்களும் வருகின்றார்கள்.எனவ இந்த படகுகளின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் கட்டம் கட்டாக இவர்களின் வருகை முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது என மாவட்ட மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது புத்தளம் கறுக்குப்பனையினை சோந்த மீனவர்களின் பிரதிநிதிகளும் தங்கள் கோரிக்கையினை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்கள்.இருவரும் ஒரு இணக்கப்பட்டிற்கு வரவேண்டும் எனஅமைச்சர் தெரிவித்துள்ளதுடன் கடந்தகாலங்களில் இருந்ததை விட 150 படகுகளுக்கு அனுமதி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை கண்காணிப்பதற்காக கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் பிரதேச செயலகம் மீனவ அமைப்புக்கள் உள்ளடங்கலாக குழு ஒன்று தெரிவு செய்யவேண்டும் என அறிவித்துள்ளதுடன் இந்த குழு நாளை மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்று அவற்றை அமைச்சருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here