நிலத்தின் அடையாளத்தினை தக்கவைக்க கலை முக்கியமானது-பா.உ.சி.சிறீதரன்!

0
76

எங்களின்கலை கலாச்சரங்களை எங்கள் பண்பாடுகளை எங்கள் நிலத்தின் அடையாளங்களை தக்கவைப்பதற்கு கலை என்பது முக்கியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

21.03.21 அன்று புதுக்குடியிருப்பில் நடைபெற்ற அன்பின் ஒளிவெள்ளம் இசைத்தட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரைநிகழ்த்துகையில் இவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு இனத்தின் இருப்பினையும் வாழ்வில் முதலாவது மொழி,அடுத்தது அந்த இனம் வாழ்கின்ற நிலம், மூன்றாவது கலை பண்பாட்டு அடையாளம் இணைந்ததுதான் ஒரு தேசிய அடையாளத்தினை இனத்திற்கு கொடுக்கின்றது அதனால்தாங்கள் இன்று உலக பந்தில் ஒரு தேசிய இனமாக எங்களை வரையறுத்து வைத்திருக்கின்றோம்

இன்று காலைஞர்கள் வாழ்வதற்காக சீவியம் நடத்துவதற்காக பல இடங்களில் போராடுகின்றார்கள். இப்படிப்பட்ட பல கலைஞர்களை என்னால் பார்க்கமுடிந்தது நாங்கள் பெரிசாக செய்யமுடியவில்லை முடிந்த அளவிற்கு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here