முல்லைத்தீவில் 13 கடைத்தொகுதி பிரதேச சபையிடம் கையளிக்காமல் இருப்பது ஏன்! பிரதேச சபை உறுப்பினர் க.விஜிந்தன்

0
75

முல்லைத்தீவில் 13 கடைத்தொகுதி பிரதேச சபையிடம் கையளிக்காமல் நகரசபை கோள்விகோரல் அறிப்பு?

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.விஜிந்தன் அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை 20.03.21 அன்று நடத்தியுள்ளார்.

இதன் போது அவர் தெரிவிக்கையில். முல்லைத்தீவு நகரில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசையினால் 13 கடை தொகுதிகள் கட்டப்பட்டு பிரதேச சபையிடம் கையளிக்க்பபடவுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த கட்டடங்கள் சபையிடம் கையளிக்காத நிலையில் கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கேள்விகோரல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபைக்கு வழங்கப்பட இருந்த கடைத்தொகுதி யாருக்கும் தெரியாத இடத்தில் மாவட்ட செயலாளர்,ஆழுனர்,பிரதேச சபைக்கு தெரியாத நிலையில் இதன் உள்நோக்கம் என்ன என்று தெரியாத நிலை காணப்படுகின்றது

போருக்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகின்ற எந்த அரசியல் பிரமுகர்களாக இருந்தாலும் எவராக இருந்தாலும் சரி மாவட்டத்தினை மேம்படுத்த வேண்டும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்று பேச்சளவில் அள்ளி வீசுகின்றார்கள் ஆனால் நகரசபையினால் கட்டப்பட்ட கடைத்தொகுதி கேள்விகோரலுக்கு விடப்பட்டுள்ளமையானது வசதிபடைத்த வேறு மாவட்டத்தனை சேர்ந்த தென்னிலங்கையனை சேர்ந்தவர்கள்தான் இதனை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உள்ளது.

இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உரிய தரப்பினருக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளோம் இது ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் குறித்த கடைத்தொகுதி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட நகர அபிவிருத்தி சபையின் முகாமையாளர் தெளிவாக சொல்லி உள்ளார்.

இந்த குத்ததைக கோரலை நகரஅபிவிருத்தி சபை நிறுத்தி அதனை பிரதேச சபையிடம் ஒப்படைத்து உரியமுறையில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் இது தொடர்பில் ஆளுனர்,பிரதம செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

இதை பிரதேச சபையிடம் ஒப்படைத்து பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களுக்கு பயன் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் சட்ட நடவடிக்கையினையும் எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.விஜிந்தன் கண்டனத்தினையும் எதிர்ப்பினையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நடவடிக்கை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காத நிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here