வடகிழக்கிற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது- கோவிந்தன் கருணாகரம்!

0
75

பூகோள அரசியல்நிலையில் தமிழ்மக்களுக்கு வடகிழக்கிற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது- கோவிந்தன் கருணாகரம்!

தற்போதைய நிலையில் பூகோள அரசியல்நிலையில் தமிழ்மக்களுக்கு வடகிழக்கிற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தவிசாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் 20.03.21 அன்று முல்லைத்தீவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு முக்கியமான காலட்டமாக இருக்கின்றது கட்சியினை பலப்படுத்திக்கொள்ளும் போது தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழ்தேசிய கட்சிகள்,தமிழ்மக்களின் அரசியல் பலம் தானாகவே பலப்படும்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இன்று கூட்டமைப்புக்குள்ளேயே போராடிக்கொண்டிருக்கின்றது கூட்டமைப்பில் இருந்து பிரிநித்து சென்றவர்கள் இன்று 10 தமிழ் கட்சிகள் என்று எங்களையும் சேர்த்து கூட்டாக சில விடையங்களில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த கட்சிகள் இணைந்து தமிழ்தேசிய பேரவை என்று ஒன்று உருவாக்க முயற்சிஎடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழீழவிடுதலைப்புலிகள் இயங்கு நிலையில் இருந்த காலத்தில் அவர்களின் ஆதரவுடன் உருவாகிய தமிழ்தேசியக்கூட்டமைப்பு பலப்படவேண்டும் பதிசெய்யப்படவேண்டும் கட்டமைப்பு உருவாகவேண்டும் தமிழ் மக்களுக்கான தமிழ்தேசியகத்திற்கான ஒரே குரலாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு பிரிந்து சென்ற கட்சிகளையும் நபர்களையும் இணைத்து தமிழ்மக்களின் போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும்.

தற்போதைய நிலையில் பூகோள அரசியல்நிலையில் தமிழ்மக்களுக்கு வடகிழக்கிற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. மாகாணசபை தேர்தல் மிகவிரைவில் வரக்கூடிய நிலையில் ஜக்கியநாடுகள் சபையில் மனித உரிமை ஆணையகம் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இலங்கை சம்மந்தமான விடையங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இலங்கையில் நடைபெற்ற அநியாயங்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் இனிமேல் இப்படியான பிரச்சனை நடக்காமல் நிதந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்ற விதத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது இலங்கைக்கு எதிராக ஒரு பிரேரணை வர இருக்கின்றது

இது குறித்து இந்தியா கூடுதலான கவனம் எடுத்து தமிழ்மக்களின் அநியாயங்களுக்கு நீதியும் வடகிழக்கு மாகாணங்களுக்கு பூரண அதிகாரங்களுகம் வழங்கப்பட்ட அதிகார பரவலாக்கலுடன் சேர்ந்த மாகாணசபை உருவாகவேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் ஜ.நா மனிதஉரிமை ஆணையகம் மாத்திரம் அல்ல இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சர் டக்டர் ஜெயசங்கர் இலங்கை பிரச்சனையினை அத்துவேறு ஆணிவேறாக தெரிந்து கொண்டவர் அவர் சொல்லியுள்ளார் முழு அதிகாரங்களும் பகிரப்படவேண்டும் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்று.

அந்தவகையில் நடைபெற்றுக்கொண்டிருப்பவை நமக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கின்றது இதனை நாங்கள் சரியாக பயன்படுத்துவதற்கு தமிழ்தேசியக்கூட்டமைப்பினை பலப்படுத்தி ஒரே குரலாக மக்களின் உரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here