31 ஆண்டுகளின் பின்னர் முல்லைத்தீவிற்கு கிடைத்த வரப்பிரசாதம் வானிலை அவதானிப்பு நிலையம்!

0
86

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான கரையோரப்பகுதிகள் காணப்படுகின்றன பல கடற்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.இன்னிலையில் 31 ஆண்டுகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் வானிலை அவதானிப்ப pலையம் இயங்கத்தொடங்கியுள்ளது இது மாவட்டத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்பெற்ற வானிலைஅவதானிப்பு நிலைய திறப்பு நிகழ்வில் (23.03.21) கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உலக வானிலை தினத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசியரீதியில் மாவட்ட காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்ட நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன இது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமைதருகின்றது

அடிக்கடி காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திடீர் அனர்த்தங்கள் நிகழ்கின்றன வறட்சி,சூறாவளி,சுனாமி,திடீர்வெள்ளப்பெருக்கு என்பன ஏற்படுகின்றன.

இதற்கான நிலையம் மாவட்டத்தில் இல்லாத நிலையில் தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளமையானது விவசாயிகள்,மற்கள் கடற்தொழிலாளர்கள் வானிலை தொடர்பான மாவட்டத்தின் தகவலை அறிந்துகொண்டு செயற்படக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here