முல்லைத்தீவு மாவட்டத்தில் 2252 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட நிதி கிடைக்காத நிலையில் போராட்டம்!

0
90

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கு முதற்கட்ட கொடுப்பனவாக கிடைக்கப்பெற்று இன்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மீதி பணம் கிடைக்காத நிலையில் மக்கள் வீதிக்கு இறங்கி 29.03.21 போராட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள்.

மாங்குளம் பகுதியில் உள்ள மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகம் முன்னாலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாலும் மக்கள் கவனயீர்ப்புபோராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1344 வீடுகளும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 520 வீடுகளும் கரைதுறைப்பற்று பிரதேச்தில் 76 வீடுகளும் துணுக்காய் பிரதேசத்தில் 182 வீடுகளும் மாந்தைகிழக்கில் 129 வீடுகளும் வெலிஓயா பிரதேசத்தில் 1 வீடுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2252 வீடுகளுக்கான இரண்டாம் கட்ட நிதிகள் புதிய அரசாங்கத்தினால் விடுவிக்கப்படாதநிலையில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் வீடு இல்லாத நிலையில் தற்காலிக கொட்டில்களிலும்பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றார்கள் இன்னிலையில் புதிய அராசங்கம் தங்கள் நிலையினை கருத்தில் கொண்டு இந்த வீடுகளுக்கான நிதியினை விடுவித்து தரவேண்டும் என பிரதேச செயலாளர், மாவட்டசெயலாளர்,வடமாகாண ஆளுனர்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரிக்கு மனு அனுப்பியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here