ஒரு மாதத்திற்குள் வீட்டுத்திட்ட நிதி விடுவிக்காவிடின் தொடர் போராட்டம்!

0
74

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் கடந்த 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கு முதற்கட்ட கொடுப்பனவாக ஒரு இலட்சம் தொடக்கம் இரண்டு இலட்சம் வரை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

7.5 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டத்தின் புதிய அரசாங்கத்தினால் மீதி நிதி விடுவிக்காப்படாத நிலையில் வீட்டுத்திட்ட பயனாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இன்னிலையில் ஏ9 வீதி மங்குளம் பகுதியில்உள்ள வீடமைப்பு அதிகார சபையின் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை 29.03.21 நடத்தியுள்ளார்கள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீட்டுத்திட்டத்திற்கு மீதி கொடுப்பனவுகளை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இன்னிலையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட கணக்காளர் என்.பழனிவேல் வருகைதந்து கலந்துரையாடி மூன்று மாத காலத்திற்குள் நிதியினை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ள நிலையில் ஆர்ப்பாட்ட காரர்கள் ஒரு மாத காலத்திற்குள் தீர்வு கிடைக்காவிடின் தொடர் போராட்டத்தினை மேற்கொள்வோம் எனதெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த திருமுறிகண்டி,இந்துபுரம்,வசந்தநகர் உள்ளிட்ட கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here