முல்லைத்தீவில் நிவாரண விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் மக்கள்!

0
84

”பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய 1000 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ள நிலையில்” முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரே ஒரு சதோசா விற்பனை நிலையம் காணாப்படுகின்றது,

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள ஹிச்சிராபுரம் பகுதியில் இது அமைந்துள்ளதால் மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களில் உள்ள மக்கள் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யமுடியாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவிவித்துள்ளார்கள்.

அதிக விலைகொடுத்து தனியார் வணிக நிலையங்களிலே மக்கள் அத்தியவசியபொருட்களை கொள்வனவு செய்து வருகின்றார்கள்.

கடந்த ஆண்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சதோசா விற்பனை நிலையம் ஒன்று இயங்கிவந்த நிலையில் அது இந்த ஆண்டு தொடக்கத்தில் பூட்டப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சதோசா விற்பனை நிலையம் அமையப்பெற்றால் அத்தியவசிய பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here