துணுக்காய் பிரதேசத்தில் உள்ள 8 கிராமங்களில் வளங்கள் சூறையாடப்படுகின்றன-தவிசாளர் முறைப்பாடு!

0
85

முல்லைத்தீவு துணுக்காய் எல்லைப்பகுதிகளில் உள்ள 8 கிராமங்களின் இயங்கை வளங்கள் சூறையாடப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவிடம் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் அ.அமிர்தலிங்கம் முறையிட்டுள்ளார்.

02.04.21 அன்று ஐயன்கன் குளம் கிராமத்தில் நடைபெற்ற பொலீஸ் நிலைய திறப்பு நிகழ்வின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

எட்டு கிராம சேவையாளர்பிரிவில் அதிகளவில் காடுகள் காணப்படுகின்றன காட்டில் உள்ள பெறுமதியான பாலை,முதிரை மரங்கள் என்பன அழிக்கப்படுவதுடன் மணல் அகழ்வும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.
இதனால் கிராமங்களின் வீதிகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 கிலோமீற்றர் காபற் வீதிகூட அழிவடைந்துள்ளது.

இந்த பகுதிக்காக ஐயன்கன் குளம் பொலீஸ் நிலையம் திறந்துவைத்துள்ளமை மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்,பொலீஸ் நிலையத்திற்கு சரியான ஆழணியினை வைத்து இந்த கிராமங்களில் சூறையாடப்படும் வளங்களை பாதுகாக்கவேண்டும் என முறையிட்டுள்ளார்.

இவ்வாறனவ சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தது வதற்காகவே பொலீஸ் நிலையம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது, சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலான தகவல்களை பொலீஸ் நிலையத்தில் வழங்கவேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here