மாங்குளத்தில் மழையுடன் வீசிய கடும் காற்றினால் 14 வீடுகள் சேதம்!

0
105

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மழையுடன் வீசிய கடும் காற்று கனமழையினால் 14 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் வாழ்வாதரமாக வளர்த்து வந்த கோழிக்கொட்டில் மேல் பாலைமரம் முறிந்து வீழ்ந்து 60 ற்கு மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளன.

04.04.21 மாலைவேளை மாங்குளம் பிரதேசத்திற்கு உட்பட்ட பனிக்கன்குளம்,கிழவன்குளம் கிராமங்களில் வீசிய கடும் காற்று மழையினால் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இரண்டு கிராமங்களில் தற்காலிக மற்றும் நிலையான வீடுகளின் வசித்து வரும் 14 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்காலிக வீடுகளின் கூரைகள் முற்றாக காற்றினால் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன், நிதந்தர வீடுகளின் சீற் மற்றும் ஓடுகளும் காற்றினால் தூக்கிவீசப்பட்டுள்ளன.வாளைமரங்கள் மற்றும் பாலைமரங்கள் என்பன முறிந்துள்ளதுடன் ஒரு குடும்பத்தின் வாழ்வாதரமான கோழிக்கொட்டில் மேல் பாலை மரம் முறிந்து வீழ்ந்ததில் 60 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் கோழிக்கொட்டில் முற்றாக சேதமடைந்துள்ளன.

வீடுகளின் சோதவிபரங்கள் தொடர்பில் கிராமசேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் விபரங்கள் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரும் உடனடி உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here