புதுக்குடியிருப்பில் உறுதிக்காணியினை அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டு அலைந்து திரியும் குடும்பஸ்தர்!

0
87

புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தயாலயத்தின் அபிவிருத்திக்காக தனது உறுதிக்காணி அரை ஏக்கரினை கொடுத்துவிட்டு இதுவரை மாற்றுக்காணி கொடுக்காத நிலையில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் குடும்பஸ்தர் ஒருவர் அலைந்து வருகின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கணிப்பிணக்குகள் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படாமையினால் பல குடும்பங்கள் காணிகளை எல்லைப்படுத்துவதிலும் வீட்டித்திட்டங்களை கட்டுவதிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றார்கள்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் றோமன் கத்தோலிக்க வித்தயாலயத்தின் அபிவிருத்திக்கா தனது உறுதிக்காணியினை வழங்கியுள்ளார் குறித்த நபரிடம் எந்த அனுமதியும் பெறாமல் பாடசாலை அபிவிருத்திக்காக எடுத்துள்ள நிலையில் இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் பல தடவைகள் எடுத்துக்கூறியும் குறித்த நபருக்கான மாற்றுக்காணி வழங்குவதில் பிரதேச செயலம் இதுவரை உறுதியான முடிவு எடுக்காத நிலையில் தனது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்ல முடியாத நிலை காணப்படுவதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் அரச காணியினை அத்துமீறி பிடித்தநபரினை வெளியேற்றச்சொல்லியும் குறித்த காணியினை பிரதேச சபை ஆழுகை செய்ய சொல்லியும் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரியப்படுத்தியும் ஒரு பயனாளிக்கு காணிகொடுத்து வீட்டுத்திட்டம் வழங்கியும் குறித்த பகுதியில் அரச காணியினை அந்த நபர் ஆக்கிரமித்து வைத்தும் புதுக்குடியிருப்பில் உள்ள பிரதேச சபையோ அல்லது பிரதேச செயலகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கவலை தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here