14 ஏக்கர் விவசாய நிலம் குளத்தின் கீழ் உள்வாங்கப்படாமையினால் சிறுபோக நெற்செய்கை பாதிப்பு!

0
66

சுதந்திரபுரம் பகுதியில் 14 ஏக்கர் விவசாய நிலம் குளத்தின் கீழ் உள்வாங்கப்படாமையினால் சிறுபோக நெற்செய்கை பாதிப்பு விவசாயிகள் கவலை !

முல்லைத்தீவு புதுக்குடியிப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் 7 குடும்பங்களுக்கு சொந்தமான 14 ஏக்கர் விவசாய நிலத்தினை உடையார் கட்டு குளத்தின் கீழ் உள்வாங்கப்படாமையினால் சிறுபோக நெற்செய்கைக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 14 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,; சிறுபோக நெற்செய்கைக்கு உடையார் கட்டு குளத்தின் கீழ் குறித்த வயல் காணிகள் உள்வாங்கப்படாமையினால் வயல்களுக்கு குளத்து நீர் கிடைப்பதில்லை என கவலை தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து உடையார் கட்டுகுள நீர்பான பொறியிலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது உடையார் கட்டு குளத்தின் 1280 ஏக்கருக்கு சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது பதிவில் இல்லாத காணிகளுக்கான தண்ணீர் வழங்முடியாத நிலை பதிவு செய்வதாயின் அவர்கள் அரசாங்க அதிபரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக கூட்டம் ஒன்று ஏனைய விவசாயிகளுடன் இடம்பெற்று கலந்துரையாடி அவர்களை உள்வாங்குவதாக இல்லை என முடிவு எடுக்கப்படும் குறித்த விவசாயிகள் முதலில் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன்வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here