முல்லைத்தீவில் ”ஆம்பல்” எனப்படும் அரியவகை பொருளுடன் நால்வர் கைது!

0
94

முல்லைத்தீவில் ஆம்பல் எனப்படும் அரியவகை பொருளுடன் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

19.04.21 இன்று காலை 2 கிலோ 500 கிராம் நிறைகொண்ட பெறுமதியான ஆம்பல் எனப்படும் அரியவகையான பொருளினை முல்லைத்தீவில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார்கள்.வட்டுவாகல் பாலத்தில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்

அனுராதபுரம் புத்தளம் பகுதியினை சேர்ந்த சிங்கள இனத்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் கைதானவர்களும் குறித்த அரியவகை பொருளும் முல்லைத்தீவு பொலீஸ்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்டுள்ளார்கள்,

ஒட்டுசுட்டான் சாளம்பனில் மரணமடைந்த வயோதிபருக்கு கொரோனா பலரிடம் பி.சி.ஆர்!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் நகர்பகுதி மற்றும் சின்னச்சாளம்பன் பகுதிகளில் 18.04.21 இன்று பலரிற்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து தெரியவருகையில்
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அண்மையில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் அவரின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்று ஜந்துநாட்களுக்கு மேல் ஆன நிலையில்

இறுதி நிகழ்விற்காக தெற்கில் இருந்து பலர் வருகை தந்துள்ளார்கள் குறித்த வயோதிபர் உயிரிழப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அவரின் இறுதி கிரியைகள் நடைபெற்ற பின்னரே வெளியாகியுள்ளதாகவும் அவருக்கு கொவிட் 19 இருப்பதாகவும் அதனால் மரணவீட்டிற்கு சென்றவர்கள் கிராமத்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

சாளம்பன் கிராமத்தினை சேர்ந்த பலருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பலர் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here