முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை 4 படகுகளுடன் 6 மீனவர்கள் கைது!

0
83

முல்லைத்தீவு கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட கடற்தொழில்நீரியல்வளத்திணைக்களம் கடற்படையினருடன் இணைந்து தொடர்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில்நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் வி.கலிஸ்ரன் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு நடவடிக்கையாக மாத்தளன் கடற்பரப்பில் கடற்படையினருடன் இணைந்து நேற்று இரவு (20.04.21)மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது நான்கு படகுகளுடன் ஆறு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் படகுகளில் சட்டவிரோதமான ஒளிபாச்சி மீன்பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது இவர்களிடம் இருந்து ஒளிபாச்சும் கருவிகள் பற்றறிகள், தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படித்தி பிடிக்கப்பட்ட மீன்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட கடலில் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்தொழில் நடடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் மாவட்டகடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here