முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் ஊர்தி பதிவுத் திணைக்களத்தில் தனி சிங்களத்தில் விண்ணப்ப படிவம் அவதிப்படும் சாரதிகள்!

0
76

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்டசெயல வளாகத்தில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தினை புதுப்பிப்பதற்காக சென்ற வேளை தனிச்சிங்களத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளமையினால் நிரப்பமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ்மக்கள் செறிந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 23.04.21 அன்று முல்லைத்தீவில் எல்லை கிராமமான துணுக்காய் பிரதேசத்தில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் துரத்தில் உள்ள மாவட்ட செயலத்தில் அமைந்துளு;ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரத்தினை புதுப்பித்துக்கொள்வதற்காக சென்ற பெண் ஒருவருக்கு அங்குள்ள அலுவலகத்தில் இருந்து தனிச்சிங்களத்தில் விண்ணப்படிவத்தனை வழங்கிவிட்டு இதனை நிரப்பி தருமாறு அறிவித்துள்ளார்கள்.

குறித்த குடும்ப பெண் சிங்களத்தில் யாரிடம் சென்று நிரப்புவது என்று தெரியாத நிலையில் அருகில் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்றவேளை அங்கு விடுமுலையில் செல்வதற்காக நின்ற இராணுவ வீரர்களிடம் தனக்கு தெரிந்த சைகையில் கொடுத்துள்ளார் இதனை பார்த்த குறித்த இராணுவீரர் குடும்ப பெண்ணின் அடையாள அட்டையினையும் விபரங்களையும் வாங்கி விண்ணப்ப படிவத்தினை நிரப்பி கொடுத்துள்ளார்.
நீண்ட தூரங்களில் இருந்து அரச சேவையினை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகை தரும் மக்கள் மொழி பிரச்சனையினால் பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.

தனி சிங்கள மொழியிலேயே குறித்த விண்ணப்ப படிவம் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து அரச சேவையினை மக்கள் இலகுவாக பெற்றுக்கொடுக்க ஆவண செய்யவேண்டும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here