கரைதுறைப்பற்று தவிசாளரின் அதிரடி நடவடிக்கை மக்களுக்கான அறிவிப்பு!

0
77

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட துப்பரவு செய்யாத மக்களின் வெறுங்காணிகளை உடனடியாக துப்பரவு செய்யவேண்டும் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் க.விஜிந்தன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்..
கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட மக்கள் நடமாடுகின்ற அல்லது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பற்றைக்காடுகளாகவுள்ள தனியார் மற்றும் பொதுக்காணிகள் உடனடியாக துப்பரவு செய்வதுடன் தொடர்ந்தும் பராமரிக்கப்படல் வேண்டும் பிரதேச சபையினால் வழங்கடுகின்ற கால எல்லையினுள் துப்பரவு செய்யாப்படின் பிரதேச சபையின் ஏற்பாட்டில் துப்பரவு செய்யப்பட்டு கூலியுடன் தண்டப்பணமும் அறவிடப்படும்.

இவ்வாறன பற்றைக்காடுகளை துப்பரவு செய்வதினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தவிர்ப்பதுடன் சூழலையும் அழகாக வைத்திருக்கமுடியும் அதுமட்டுமல்லாது பயிர்ச்செய்கைக்கும் ஊக்கமளிக்கும். நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதும் அழகுபடுத்துவதும் எமது கடமை.

அதுமட்டுமல்லாது வீதிகளில் தண்ணீர்பாயும் வடிகால்களில் குப்பைகள் கழிவுகள் போடுவோர் மீது தண்டபணம் அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here