இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

0
168

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை வழக்கம் போல கொண்டாடலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது நடைமுறையில் உள்ள கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,இங்கிலாந்தில் கிறிஸ்மஸ் முடிந்த பின்னர் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், தனது வழக்கமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய,ஒமிக்ரோன் பரவலின் எதிரொலியாக சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ராணி 2-ம் எலிசபெத் ரத்து செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில், உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்,இதுவரையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஒமிக்ரோன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here