முல்லைத்தீவில் யாழ் ஆசிரியர் சிக்கியது எப்படி; வெளியான அதிர்ச்சி தகவல்; பெற்றோர்களே அவதானம்!!

0
417

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் சிக்கிய விவகாரத்தில், மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் மாவட்டத்தின், வடமராட்சி பகுதியை சேர்ந்த 26 வயதான விஞ்ஞான பாட ஆசிரியரே கைதாகியுள்ளார். அவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியரின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ வழியாகவே அவர் சிக்கிதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை ஆய்வுகூடத்தில் இரண்டு மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வீடியோக்கள் ஆசிரியரின் கையடக்க தொலைபேசியிலிருந்து வேறு தரப்பிற்கு சென்றதாக தெரிகிறது.

ஆசிரியர், இரண்டு மாணவிகளுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், மற்றும் சில மாணவிகளுடன் இணையத்தளத்தில் சட் செய்த விபரங்களை, யாரோ ஒரு தரப்பு முல்லைத்தீவு வலயக்கல்வி பணிமனைக்கு ஆவணமாக அனுப்பி வைத்துள்ளது.

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட வலயக்கல்வி பணிமணை, அது குறித்த அறிக்கையை மாகாண கல்வியமைச்சிற்கு அனுப்பி வைத்திருந்தது. இதையடுத்து, ஆசிரியர் பாடசாலையில் கற்பிக்க தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகளின் கீழ், கடந்த 24ஆம் திகதி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் கடந்த 25ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில்வைக்க உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டுக்கள் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்கும், ஆசிரியர் கைது செய்யப்பட்டதற்குமிடைப்பட்ட கால இடைவெளி குறித்து, பிரதேச மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து துரித விசாரணை நடத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகளை வலிறுத்தியுள்ளனர்.

மேலும் சில பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினைகள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன, மாணவ மாணவிகள் இடத்தே ஏற்படும் பயம் காரணமாக விடையங்கள் வெளியில் வருவதில்லை, எனவே இவ்வாறான பிரச்சினைகளை தைரியமாக வெளியில் கொண்டுவருவதன் மூலமே தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது,

மற்றும் பெற்றோர்கள் உங்கள் மாணவ மாணவிகள் மீது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது, பாடசாலையில் நடைபெறும் பிரசினைகளை உங்கள் பிள்ளைகளிடம் நல்ல முறையில் கலந்துரையாடி அறிந்துகொள்ளுங்கள், அவர்களை உங்கள் கண்ணோட்டத்தில் வைத்திருப்பது நல்லது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here