எங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டாம்; பொலிஸாரிடம் கூறிய காணாமல்போன சிறுவர்கள்!!

0
1047

வத்தேமுல்ல, பதுராகொட, கொட்டதெனியாவ பிரதேசத்தில் நாற்பத்து நான்கு (44) நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இரண்டு சிறுவர்கள் மீரிகமவில் நேற்று (06) மீரிகம பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இரண்டு குழந்தைகளும் நவம்பர் 23 ஆம் திகதி வீடுகளில் இருந்து காணாமல் போயினர்

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், கொட்டாஞ்சேனை பொலிஸார் இரு குழந்தைகளையும் கண்டுபிடிப்பதற்கு பலத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது தோல்வியடைந்து விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளது.

10 மற்றும் 12 வயதுடைய இரு குழந்தைகளையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய போது, ​​அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி பல நாட்களாக நீர்கொழும்பில் இருந்ததாக தெரிவித்தனர்.

நீர்கொழும்பில் இருக்கும் போது இரண்டு பிள்ளைகளும் பல்வேறு நபர்களிடம் உணவு கேட்டு பசியை போக்க மீரிகமவிற்கு சென்றுள்ளனர்.

பின்னர் மீரிகம சென்றபோது அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவர்களை சந்தித்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்டி சுத்தப்படுத்திய பெண்இ ஊடகங்களில் வெளியான செய்திகளைக் கண்டு, இரண்டு குழந்தைகளும் கொட்டதெனியவில் காணவில்லை என அடையாளம் கண்டு மீரிகம பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக மீரிகம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

விசாரணைகளுக்காக கொட்டதெனியாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதன்படிஇ சிறுவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும்இ கொட்டதெனியாவப் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தினமும் அம்மா தங்களை அடிப்பதாகவும் இதற்கு முன்னரும் வீட்டை விட்டு ஓடியதாகவும் பொலிசார் அவர்களை வீட்டில் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பஸ் மூலம் நீர்கொழும்பு சென்று 40 நாட்கள் நீர்கொழும்பு நகரில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மீரிகம ஆன்ட்டியின் வீட்டில் தங்க இடம் கொடுங்கள் என குறித்த சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here