கொரோனா தடுப்பூசி செய்த மாயம்; படுத்த படுக்கையாக இருந்தவரை எழுந்து நடக்க வைத்த அதிசயம்!

0
220

இந்தியாவில் சுமார் 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த நபருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்ட அடுத்த நாள் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

விபத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயது முதியவர் இருந்தார்.

இந்நிலையில் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் முதல் டோஸ் மருந்தை செலுத்திய பின்னர் அவர் நடக்கவும் பேசவும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருகையில், பொகாரோ மாவட்டத்தின் உத்தசரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள சல்காதி கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த் முண்டா என்பவர் , ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி நடக்கவும் பேசவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார்.

இந்நிலையில் கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியை ஜனவரி 4 அன்று, அவரது வீட்டிற்கு சென்ற சுகாதார ஊழியர்கள் செலுத்தினார். தடுப்பூசி செலுத்திய அடுத்த நாள், முண்டா எழுந்து நடக்க தொடங்கியதோடு பேசவும் ஆரம்பித்தார் என கூறப்படுகின்றது.

இது குறித்து பொகாரோவின் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜிதேந்திர குமார்,

” இந்த அதிசயமான நிகழ்வு” குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. முண்டா முதுகுத்தண்டு பிரச்சனையால் படுத்த படுக்கையாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முண்டா, சாலை விபத்தில் படுகாயமடைந்த நிலையில் படுக்கையில் முடங்கி போனார்.

“இது ஒரு ஆச்சரியமான சம்பவம். அவரது மருத்துவ வரலாற்றை நாங்கள் பகுப்பாய்வு செய்வோம், என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவத்தால் அக் கிராம மக்கள் மட்டுமல்லாது பல்லரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here