ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான கணவன்; மனைவி எடுத்த திடீர் முடிவு!!

0
881

கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண்ணொருவர் விவாகரத்து கோரிய சம்பவமொன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய்த விவாரத்து வழக்கொன்றில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் அரச உத்தியோகத்தரான யுவதியொருவர் 3 மாதங்களின் முன் திருமணம் முடித்திருந்தார். அரச உத்தியோகத்தரான கணவர், நீலப்படங்களிற்கு அடிமையானவர் என்பதை, திருமணத்தின் பின்னரே யுவதி அறிந்தார்.

நீலப்படங்களில் இடம் பெறும் பாலியல் காட்சிகளை போல, நிஜ வாழ்விலும் செயற்பட வேண்டு மென்ற கணவரின் விபரீத முயற்சிகளையடுத்து, திருமணமான 3 மாதங்களிலேயே அந்தப் பெண் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

சில மாதங்களின் முன்னர் வவுனியா பகுதியில், கணவரின் அதீத பாலியல் நாட்டத்தால் மனைவி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here