லண்டனில் ஒரு பலாப்பழத்தின் விலை 44,000 ஆயிரம் ரூபாவா?? அதிர்ச்சியில் மக்கள்!!

0
150

லண்டனில் கடை ஒன்றில் பலாப்பழம் ஒன்று 160 பவுண்ட் (44,026 இலங்கை ரூபாய்க்கு) விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகவியலாளர் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

லண்டனில் Borough சந்தை வளாகத்தில் உள்ள ஒரு கடையில் 160 பவுண்டுகள் பெறுமதியான பலாப்பழம் விற்பனைக்கு இருப்பதாக சர்வதேச ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விலையை பார்த்து வியப்படைந்து பலாப்பழம் வைத்திருந்த தளத்தை அடிக்கடி பார்வையிட்டார். பலாப்பழத்தை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டகிராம் மற்றும் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த விலைக்கு அதிர்ச்சியடைந்துள்ள ருவிட்டர் பயனாளிகள், வெப்ப மண்டல நாடுகளில் உள்ளவர்கள் பலாப்பழம் விற்று கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என்று கூறியுள்ளனர்.

பல நாடுகளில் மரங்களில் இருக்கும் பலாப்பழம் வீணாகும் போது, ​​பிரித்தானியாவில் ஏன் பலாப்பழம் இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்று ருவிட்டர் பயனாளிகள் கருத்திட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்காவில் சில தமிழர் வசிக்கும் பிரதேசங்களில் இந்த விலைக்கும் எடுக்க முடியாதென மேலும் சிலர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here