அவுஸ்திரேலியாவில் முதல் முறையாக 13 பெண்கள் அமைச்சா்களாக பதவியேற்பு.!

0
133

அவுஸ்திரேலியாவின் புதிய அமைச்சரவை நேற்று (01) பதவியேற்றது.

அவுஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத வகையில் 13 பெண் அமைச்சா்களை உள்ளடக்கிய அமைச்சரவை பதவியேற்றது.

புதிய அமைச்சரவையில் முதல் முறையாக 13 பெண்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அந்த நாட்டில் கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடா்ந்து,

எதிா்க்கட்சியான லேபா் கட்சித் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி நாட்டின் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

மத சிறுபான்மையினர், பழங்குடியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய அமைச்சரவையில் அதிகளவான பெண்களை முக்கிய பொறுப்புகளில் உள்வாங்கி பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி (Anthony Albanese) சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த நிலையில், 11 நாள்களுக்குப் பிறகு அவரது தலைமையிலான அமைச்சரவை தலைநகா் கான்பெராவில் புதன்கிழமை நடைபெற்றது.

கவா்னா் – ஜெனரல் டேவிட் ஹா்லே அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இந்த அமைச்சரவையில், இதுவரை இல்லாத அதிகபட்சமாக 13 பெண்கள் இடம் பெற்றுள்ளனா். மேலும், முதல் பெண் முஸ்லிம் அமைச்சா், முதல் பூா்வக்குடி பெண் அமைச்சா் இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனா்.

பூர்வீக அவுஸ்திரேலிய அமைச்சகத்தில் பதவி வகிக்கும் முதல் பழங்குடி பெண்ணாக Linda Burney வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here