நாட்டை உலுக்கிய மற்றுமொரு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு..!

0
196

ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது உதவியாளர் ஒருவரும் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றை வழிமறித்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிரிபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய மன்னா ரொஷானின் சகோதரரே உயிரிழந்துள்ளார்.தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர்களுக்கிடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் (02) பிற்பகல் அனுராதபுரம் பகுதியில் சமய நிகழ்வென்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் மார்ச் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here