கடந்த சில தினங்களாக குறைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (06) அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 185,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல இலங்கையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்று சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் அதிகரித்து 6045 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் அதிகரித்து 48320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.