2 மணி நேரம் முடங்கிய சேவையால் 100 மில்லியன் டாலர்களை இழந்த மெட்டா.!

0
137

ஃபேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் நேற்றிரவு திடீரென முடங்கியதால் பயனர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த முடக்கத்தால், சமூக வலைதளங்களுக்குச் சொந்தமான மார்க் ஜூக்கர்பெர்க்கின் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை (05) இரவு திடீரென முடக்கப்பட்டன.

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஒரே நேரத்தில் 2 மணி நேரம் முடக்கப்பட்டமை இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.

சமூக ஊடக தளங்களான Facebook, Messenger மற்றும் Instagram ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து Meta பங்குகளும் 1.5 சதவீதம் சரிந்தன.

அதேசமயம் ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிழந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என தெரிவித்த ‘மெட்டா’ நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு, சில மணி நேரம் கழித்து, பிழையை சரி செய்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here