அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..!

0
306

அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வலய கல்வி அலுவலகங்களுக்கும் தற்போதைய நிலையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக பின்வரும் தொலைபேசி/தொலைநகல்/மின்னஞ்சலுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அந்தந்த அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.

பாட புத்தகங்களுக்கு –
* தொலைபேசி எண்கள் – 0112784815 / 0112785306
* தொலைநகல் – 0112784815
* மின்னஞ்சல் முகவரி – epddistribution2024@gmail.com

சீருடைக்கு –
* தொலைபேசி இலக்கம் – 0112785573
* தொலைநகல் – 0112785573
* மின்னஞ்சல் முகவரி – schoolsupplymoe@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here