7 மாத கர்ப்பத்துடன் பப்-ல ஆட்டம் போட்ட நடிகை அமலாபால்.. இதோ வீடியோ.!

0
97

7 மாத கர்ப்பத்துடன் பப் ல கெட்ட ஆட்டம் போட்ட அமலாபால்..!

இது பற்றி கேட்டால், பெண்ணுரிமை, சுதந்திரம் என்பார்கள். ஆனாலும் அந்த வீடியோவைப் பார்க்கும் போது மனசு பதைபதைக்கிறது. உலகில் எத்தனைப் பேர் குழந்தை வரத்திற்காக தவம் இருக்கிறார்கள். விவாகரத்துக்கு பிறகும் குழந்தையில்லாத ஏக்கம் நடிகை சமந்தாவின் வார்த்தைகளில் அவ்வப்போது வெளிப்படுகிறது. கடவுள் சிலரை குழந்தை வரத்துடன் ஆசிர்வதிக்கிறார். இத்தனை ஏன்? குழந்தை பிறந்திருந்தால் ஒரு வேளை செல்வராகவன், யுவன்சங்கர்ராஜா, ஏ.எல். விஜய் போன்றோரின் திருமணங்கள் விவாகரத்தில் முடியாமல் கூட இருந்திருக்கலாம்.

விஷயம் அது குறித்தெல்லாம் இல்லை. இயக்குநர் ஏ.எல். விஜய்யை விவாகரத்து செய்த பின்னர், தனது நீண்ட நாள் நண்பரைக் காதலித்து திருமணமும் செய்து கொண்டார் நடிகை அமலா பால். கடந்த ஆண்டு இவர்களது திருமணம் நடந்த நிலையில், 2024 ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்தார் அமலாபால்.

இனி மேலாவது திருந்துவார் என்று ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். ஆனாலும் ஆடின காலும் பாடின வாயும் சும்மாயிருக்காது என்பதைப் போல ஊர் சுற்றி வரும் அமலாபால், கொஞ்ச நாளைக்கு கர்ப்ப காலத்தில் தான் செய்யும் அனைத்து விஷயங்களையும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிட்டு வந்த நிலையில், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால், தனது கணவருடன் மது விருந்து பார்டியில் ஒன்றில் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இது ஏதோ அவரது சொந்த விஷயத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் சென்றது போல் இல்லை. யாரையோ வெறுப்பேற்றுவதற்காகவோ, யாருக்கோ மெசேஜ் சொல்வதற்காகவோ எடுத்த வீடியோ போல இருக்கிறது. அந்த பார்ட்டியில், தனது கணவருடன் உற்சாகமாக நடனமாடி கொண்டிருக்கிறார். ஒரு பக்கம், தண்ணீரில் பிருத்திவிராஜூடன் மிதக்கும் புகைப்படம் பழைய அமலாபால் நடித்த மாமனார் உறவு குறித்த மூன்றாம்தர படமான சிந்து சமவெளியை நினைப்படுத்துகிற மாதிரியான ஏடாகூட போஸ். அது சரி… நிர்வாணமாகவே கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன் என்று நடித்தும் காட்டிய அமலாபாலுக்கு இது புதுசு கிடையாது. ஆனால், வயிற்றில் வளர்கிற குழந்தைக்காகவாவது கொஞ்சம் அடக்கமா இருங்க அம்மணி என்று ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி நடனம் ஆடுவதை குறித்து விவிமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here