யாழ்ப்பாணத்தில் பிறந்து 28 நாட்களேயான குழந்தை ஒன்று பரிதாப மரணம்.!

0
205

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான குழந்தை ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளது.

யாழ் – கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (22) தாயார் சிசுவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த சமயம் குழந்தை மயங்கி உள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக மதியம் 12:30 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here