கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்..!

0
202

கனடாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் கனடாவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2013ம் அண்டில் குடியேறிகளின் எண்ணிக்கை 6000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 32000 மாக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் குடியேறிகளில் 50 வீதமானவர்கள் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் தாக்குப் பிடிக்கின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வீடமைப்பு, மருத்துவ சேவை, கல்வி வசதி, பாடசாலை வசதி போன்ற சில காரணிகளினால் குடியேறிகள் தொடர்ச்சியாக கனடாவில் வாழ்வதற்கு விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அண்மையில் போர் காரணமாக உக்ரைனிலிருந்து கனடாவின் நோவா ஸ்கோடியாவில் குடியேறிய பெண் ஒருவர் வாழ்க்கைச் செலவு பிரச்சினை காரணமாக கனடாவை விட்டு வெளியேறி, ஜோர்ஜியாவில் குடியேறியுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டில் கனடாவில் குடியேறிய டிடென்யா மெலினெக் என்ற பெண்ணே இவ்வாறு கனடாவை விட்டு வெளியேறியுள்ளார். வாழ்க்கைச் செலவு பிரச்சினை காரணமாக இவ்வாறு கனடாவை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் இருந்து கனடா செல்வோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ள நிலையில், பெரும் தொகை கொடுத்து கனடா செல்லும் பலர், இவ்வாறான வாழ்க்கை செலவு இடர்களுக்கு முகம் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here