புதுக்குடியிருப்பில் பட்டிக்குள் புகுந்து 35 ஆடுகளை திருடிய கும்பல்.!

0
102

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் ஆட்டுப்பட்டி ஒன்றில் இருந்த ஆடு மேய்ப்பர்களை தாக்கிவிட்டு பட்டியில் இருந்த 35 ஆடுகளை திருடி சென்ற சம்பவம் ஒன்று கடந்த 16.04.2024 அன்று இடம்பெற்றுள்ளது.

மல்லிகைத்தீவு பகுதியில் வாழ்வாதாரமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள் இவ்வாறு இருவர் குறித்த ஆடுகளை வளர்த்து வந்த நிலையில் இதனை கண்காணித்த கும்பல் ஒன்று ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து ஆட்டுப்பட்டிக்குள் நுளைந்து மேய்ப்பர்கள் இருவரையும் தாக்கி, பட்டியில் நின்ற 35 ஆடுகளை திருடி சென்றுள்ளார்கள் சுமார் பத்து இலட்சம் பெறுமதியான ஆடுகளே இவ்வாறு திருடிசென்றுள்ளார்கள்.

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நான்கு போர் கொண்ட கும்பல் வாகனம் ஒன்றினை பயன்படுத்தி இந்த களவு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன் நான்கு பேரும் களவெடுத்த ஆட்டினை பிரித்து பங்கிட்டுள்ளார்கள்.

இவ்வாறு பங்கிட்ட ஆடுகளின் ஒரு தொகுதியினை இருவர் நெடுங்கேணிக்கு கொண்டு சென்றுள்ளார்கள். ஏனையவர்கள் மாங்குளம், கனகராயன் குளம் பகுதிகளுக்கு கொண்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஆடுகளில் நெடுங்கேணி பகுதியில் இருவரிடம் 15 ஆடுகள் காணப்பட்டுள்ளன, திருடப்பட்ட பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் (திருடனின் மனைவி) ஒருவர் உள்ளிட்ட இருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் ஆடு திருடிய ஒருவரையும் கைதுசெய்துள்ளார்கள்.

இவர்களை இன்று 17.04.2024 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது களவாடப்பட்ட பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் பிணையில் விடுவித்துள்ளதுடன் கள்ளன் ஒருவரை சிறையில் அடைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here