முல்லை-ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா;100 பேருக்கு அனுமதி!’

0
194

”ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆண்டு திருவிழா 100 பேருடன் அனுமதி!”

”வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 17.06.2020 அன்று நடைபெற்றுள்ளது”…

”முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் மற்றும் ஆலய முகாமைத்துவ சபையின் தலைவர் சி.கணேசபிள்ளை, போசகர் சி.சிவபாலகுரு ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.”..

”மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் தெரிவிக்கும் போது ….
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது சகல தரப்பினருடனான முன்னொடி கூட்டம் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றுள்ளது நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 16 நாட்கள் திருவிழா நடைபெறும்”…

வருடாந்த திருவிழாவினை சம்பிரதாய முறையில் தடைஇல்லாமல் மக்கள் கலந்து கொள்ளாதவாறு அனுமதிவழங்கப்பட்டுள்ளது மக்களின் நேர்த்திக்கடன்களை பிறிதொரு தினங்களில் செய்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கமுடியும்…

12 நாட்கள் மக்கள் செறிவு இல்லாத விழாவாக சாதாரன பூசையாக வரும் இறுதி 4 நாட்கள் மக்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பாக்கின்றோம்… ..

வேட்டைத்திருவிழா,சப்பறதிருவிழா,தேர்த்திருவிழா,தீர்த்தத்திருவிழா மக்கள் வருவார்கள் என்று எதிர்பாக்கின்ற காரணத்தினால் அதற்கான பாதுகாப்பினை வழங்க தீர்மானித்துள்ளதுடன் மக்கள் வரவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

வேட்டைத்திருவிழா நேர்த்திக்கடனுடன் வருபவர்கள் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளது நிர்வாகம் மட்டும்தான் கலந்துகொண்டு திருவிழாவினை செய்வார்கள்….

தேர்திருவிழாவும் சிறிய தேரினை குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு இழுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது ஒட்டு மொத்தத்தில் 100 பேரை வவைத்துக்கொண்டு திருவிழாவினை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது….

ஆலய முகாமைத்துவ சபை தலைவர் சி.கணேசபிள்ளை…..

ஆலய கொடியேற்றம் செய்யப்பட்டு வழமையான கிரியைகள் நடப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது…

காவடிகள்,பால்செம்பும்,வேடுவர் நேர்த்திக்கடன்களை தவிர்த்துக்கொள்வதுடன் வளாகத்தில் கடைகள் போடப்படுவதும்,அன்னதானம் வழங்கும் நிகழ்வும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்….

ஆலய முகாமைத்தவ சபையின் போசகர் சி.சிவபாலகுரு..
ஆலயத்திற்கு வருபவர்கள் சமூகஇடைவெளியினை பேணவேண்டும் பொது சுகாதார நடைமுறையினை பின்பற்றி மக்கள் ஒத்துளைப்பினை நல்கி திருவிழா நிறைவேற உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here