முல்லைத்தீவில் மக்களின் காணிகளை சுரண்டும் நில அளவைத் திணைக்களம்!!

0
134

”முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத்திணைக்களம்” ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்…

”17.06.2020 புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு உட்பட்ட தண்டுவான் பகுதியில் நில அளவைத்திணைக்களத்தின் நடவடிக்கை”  ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்கள்….

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏ35 மற்றம் ஏ9 தர வீதிகளிகளிலும் இந்த முதன்மை வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதிகளில் மக்களுக்க செந்தமான காணிகளில் எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட நில அளவைத்திணைக்களம் ஈடுபட்டுள்ளதால் மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்….

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச சபைகளிடம் அனுமதி எடுத்து கடைகள்,வீடுகள்,மதில்கள் மக்களால் கட்டப்பட்டுள்ள நிலையில் நில அளவத்திணைக்களத்தினர் எல்லைப்படுத்தி காணிகளை அபகரித்து வருகின்றார்கள்….

உள்ளுராட்சி மன்ற் சட்டத்தின் படி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முதன்மை ஏ-தர வீதிகளின் அகலங்கள் 33 அடி என்பது வரையறை இன்னிலையில் நிலஅளவைத்திணைக்களத்தினர் 66 அடியினை அளவீடாக கொண்டு எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்….

முதன்மை விதியில் இருந்து பிரிந்து செல்லும் வீதிகள் 24 அடியாக பிரதேச சபையினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நில அளவைத்திணைக்களத்தினால் 33 அடியாக எல்லைப்படுத்தி தமிழ்மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்….

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு,கோம்பாவில்,ஒதியமலை,மேழிவனம் ஆகிய கிராமங்கள் நில அளவைத்திணைக்களத்தினரால் மக்களின் காணிகளில் எல்லைப்படுத்தப்பட்டுள்ளன….

இன்னிலையில் தண்டுவான் பகுதியில் நில அளவைத்திணைக்களத்தின் நடவடிக்கை முன்னெடுப்பிற்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி நில அளவை திணைக்களத்தின் எல்லைப்படுத்தல் நடவடிக்கையினை முன்னெடுக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்…..

மக்கள் கூட்டத்தினை தொர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நில அளவைத்திணைக்கள அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஒட்டுசுட்டான் பொலீசார் சென்றுள்ளார்கள்…..

பொலீசாரால் மக்களின் பிரச்சனையினை சுமூகமாக்க முயற்சித்த வேளை மக்களின் எதிர்பினை தொடர்ந்து இது குறித்து பிரதேச செயலாளரிடம் நாளை (18) எழுத்துமூலம் முறையிடவுள்ளதாகவம் இதன்போது நில அளவைத்திணைக்கள அதிகாரியும் வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here