மக்கள் பாவனையற்று கைவிடப்பட்ட நிலையில் சுனாமி நினைவாலய பூங்கா!

0
70

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகருக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயம் அதன் அருகில் உள்ள சிறுவர் பூங்காவினை பாவனை செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

முன்னர் வன்னிக்குறோஸ் என்ற அமைப்பின் ஆழுமையின் கீழ் இருந்த குறித்த சிறுவர் பூங்கா,பின்னர் பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் வந்துள்ளது

இன்னிலையில் சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாட முடியாத நிலையும் அனாதரவான நிலையும் காணப்படுகின்றது.
சிறுவர் பூங்காவுடன் காணப்படும் பொது நோக்கு மண்டபமும் அனாதாரவான நிலையில் காணப்படுகின்றது சிறுவர் பூங்கா பொதுநோக்கு மண்டபத்திற்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புக்கள் மற்றும் குழாய்கிணற்றுக்கான தண்ணீர் மோட்டர் என்பன திருடர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

தண்ணீர் மோட்டர் அண்மையில் களவாடப்பட்ட நிலையில் பொது மண்டபத்தின் கட்டிடத்தில் உள்ள மின்சாலை ஆழிகள் மற்றும் பெறுமதியான பான்கள்,வயர்கள் என்பன கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

மண்டபத்தில் மாட்டுசாணியுடன் காணப்படுகின்ற நிலையில் சிறுவர் பூங்காவினை பிரதேச சபையினர் சுத்தம் செய்து அதனை பூங்காவாக மாற்றிஅமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here