கரைதுறைப்பற்று பிரதேச சபையில் றிசாட்பதியூதீன் கைதிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

0
128

கரைதுறைப்பற்று பிரதேச சபையில் றிசாட்பதியூதீன் கைதிற்கு எதிராகவும் மகாவலியின் காணி அபகரிப்பிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் க.விஜிந்தன் தலைமையில் நடைபெற்ற பிரதேச சபை அமர்வின்போது இரண்டு முக்கியமான கண்டன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு சொந்தமான பல்வேறு கிராமங்கள் மகாவலி அதிகாரசபை என்ற திட்டத்தின் அடிப்படையில் காணி அதிகாரங்கள் மாகாவலி அதிகார சபைக்கு செல்லும் நிலமை காணப்படுகின்றது இதனை கண்டித்து இது ஒருபோதும் நடைபெறக்கூடாது இதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மீளப்பெறப்படவேண்டும் என்ற கோரிக்கையினை பிரதேச சபை உறுப்பினர் க.சிவலிங்கம் அவர்கள் முன்வைத்துள்ளார்

இது சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதாக கண்டன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் றிசாட்பதியூதீன் அவர்களுடைய முறையற்ற கைதினை கண்டித்து கண்டன தீர்மானம் உறுப்பினர் உ.றனிஸ்ரலா அவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது இந்த தீர்மானதிற்கு ஆதரவாக 10 பேர் வாக்களித்துள்ளதுடன் இரண்டு பேர் எதிர்த்துள்ளார்கள் 7 பேர் நடுநிலையாக வாக்களித்து மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்,திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here