தயா மாஸ்டர் தொடர்ந்தும் விளக்கமறியலில்; வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!!

0
219

விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இன்று (25) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார்.

இந்நிலையில், தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் 2009 மே 18ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள், தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

2006 ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுக்கும் கட்டளைகளின் கீழ் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றத்தை புரிந்துள்ளதாக வவுனியா மேல் நீதிமன்றில், சட்டமா அதிபரால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் தயா மாஸ்டருக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கவேண்டிய பிரிவுகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அந்த குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு குறைந்த குற்றச்சாட்டுக்கள் மாத்திரம் அவர் மீது முன்வைக்கப்பட்டது.

தன் மீதான குற்றச்சாட்டுக்களை தயா மாஸ்டர் ஒப்புக் கொண்டமையால், 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் தயா மாஸ்டர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here