ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட அறிவிப்பு.!

0
54

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் ஆஸ்துமாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை ஒருபோதும் நிறுத்த முயற்சிக்கக் கூடாது என இலங்கை சுவாச நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் ஏழாம் திகதி இடம்பெறவுள்ள “உலக ஆஸ்துமா தினத்தை” முன்னிட்டு நேற்று (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே விசேட வைத்தியர் இதனைத் தெரிவித்தார்.

பல கர்ப்பிணித் தாய்மார்கள் இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு பக்க விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

மேலும், ஆஸ்துமா நோய்க்கு வழங்கப்படும் மருந்துகள் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட சகல மக்களும் உரிய மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொண்டால் இதனை கட்டுப்படுத்த முடியும் என விசேட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.

ஆஸ்துமா நோயாளிகளைக் கொண்ட உலகின் முன்னணி நாடுகளில் இலங்கையும் ஒன்று. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஆஸ்துமாவால் பெரும் மன மற்றும் உடல் ரீதியான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

சரியாகக் கட்டுப்படுத்தப்படாத ஆஸ்துமா மரணத்திற்குக் கூட வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். 95 வீத நோயாளிகள் எளிமையான, மிகவும் பயனுள்ள மருந்துகளால் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அறியாமையால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 இலட்சம் பேர் ஆஸ்துமாவால் இறக்கிறார்கள் என்று தரவு காட்டுகிறது.

ஆஸ்துமா உள்ள கர்ப்பிணிப் பெண்கள் மருந்தை நிறுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுமென தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here