முல்லையில் தூக்கு காவடியினை இடை நடுவில் இறக்கி திருப்பி அனுப்பிய போலீசார்!!

0
142

படையினர் நிகழ்சி செய்கின்றார்கள் மக்களின் வழிபாட்டு உரிமை மீறப்பட்டுள்ளது…

முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய பொங்கல் நிகழ்விற்கு நேர்த்திக்கடன் செய்வதற்காக சென்ற தூக்கு காவடியினை பொலீசார் இடை நடுவில் இறக்கி திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது….

முல்லைத்தீவு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தின் பொங்கல் நாளான (07.06.2020) இன்று ஆலய பூசை வழிபாடுகள் சிறப்பற சுகாதார நடைமுறைகளக்கு அமைவாக நடைபெற்றுள்ளது…

படையினர் பொலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு சுகாதார பாதுகாப்பு பலப்படத்தப்பட்டுள்ள நிலையில் ஆலய நிர்வாகத்தினர் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு அறிவிப்புக்களை செய்து மக்களின் வழிபாட்டு உரிமையினை மதித்து செயற்பட்டு வந்துள்ள நிலையில்
முள்ளியவளை மாமூலை மகாவிஸ்ணு ஆலயத்தில் இருந்து பக்த்தர் ஒருவர் தூக்கு காவடி எடுத்துக்கொண்டு சென்றபோது வீதியின் இடைநடுவில் மறித்த பொலீசார் காவடி மிசினை மறித்து அதில் நேர்த்திக்காக தூங்கி சென்றவரை இறக்கி அவரின் முதுகில் குத்தப்பட்டுள்ள செடில்களை கழட்டிவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள்….

இச்சம்பவம் மக்களி வழிபாட்டு உரிமையினை மீறியுள்ளதுடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் படையினர் நிகழ்சி நிரல் அமைவாக படைத்தளபதி ஒருவர் வந்து மரக்கன்று நாட்டிவைக்கப்படவுள்ள (08) நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடாகியுள்ளார்கள….

ஆனால் மக்கள் சுதந்திரமாக நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்…

காலம் காலமாக ஆண்டு தோறும் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கும் முள்ளியவளை காட்டு விநாயகருக்கும் எந்த தடை வந்தாலும் நேர்;த்திக்கடன் செலுத்தும் பக்த்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு பொலீசாரின் அடக்குமறை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்….

1995 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் படையினர் முகாம் அமைத்து நின்றவேளைகூட படையனிரின் எறிகணைத்தாக்கதல்களுக்கு மத்தியிலும் பக்த்தர்கள் வற்றாப்பளை சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவுசெய்துள்ளமையும் இதன்போது படையினரின் எறிகணைத்தாக்குதலில் பக்த்தர்கள் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here