அரசின் செயற்பாடு ஜனநாயகத்திற்கும் மக்களின் வாழ்வியலுக்கும் எதிரானது; சி.சிவமோகன்!!

0
141

”அரசின் செயற்பாடு ஜனநாயகத்திற்கும் மக்களின் வாழ்வியலுக்கும் எதிரானது-வைத்தியக்கலாநிதி சி.சிவமோகன்”

”இந்த அரசு செயற்படும் விதம் ஜனநாயகத்திற்கும் எமது மக்களின் வாழ்வியலுக்கும் எதிரானது என்பதை அடித்து சொல்கின்றேன்” என்று முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சுதந்திரபுரம் படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு நினைவுரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்….

”மாறி மாறிவந்த சிங்கள அரசுகள் தமிழர்கள் மீது இனப்படுகொலையினை நடத்தியதற்கு சுதந்திரபுரம் படுகொலை அடையாளமாக இருக்கின்றது….

”இந்த நினைவ நிகழ்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வந்தது இன்று கொரோனாவினை காரணம் காட்டி நினைவேந்தலை தடுத்தார்கள்.
இன்று ஒரு தேர்தல் காலம் இந்த காலத்தில் எமது காணிகளை அடையாளம்” கண்டு படையினர் கையகப்படுத்துவதற்காகன முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது இதற்கு அரச அதிகாரிகள் துணைபோகின்றார்கள்….

தேர்தல் காலத்தில் வேட்பாளர் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டபின் தேர்தலில் ஒரு நோக்கத்தினை பின்புலமாக கொண்டு வடமாகாணம் கிழக்கு மாகாணத்தில் காணிகளை அளக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது..

”இவர்கள் இந்த தேர்தல் சட்டத்தினை மீறியுள்ளார்கள் அதே கொரோனா சட்டத்தினை நாங்கள் மீறவில்லை கடைப்பிடிக்கின்றோம்”
இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திற்கு சென்று முறையிடவுள்ளேன்,, காணி அளப்பு நடவடிக்கையினை நிறுத்த உடனடியாக தேர்தல் திணைக்களம் பிரதேச செயலகங்களுக்கும் அரச அதிபருக்கும் அறிவிக்கவேண்டும் தவறுமாக இருந்தால் தெரிவத்தாட்சி அலுவலகர்களாக இருப்பதற்கு அரச அதிபர்களுக்கு தகுதி இல்லை என்றும் தெரிவித்த அவர்!!

இந்த நினைவு நிகழ்வினை நடத்த விடாமல் பொலீசாரை போட்டு அடாவடி செய்து கொண்டிருக்கின்றார்கள் காரணமாக சொல்வது கொரோனா சட்டம் எப்படி கொரோனா சட்டத்தின் மூலம் நாங்கள் முப்பது பேர் ஒன்று சேர முடியாது என்றால் இந்த சட்டத்தினை வைத்துக்கொண்டு எப்படி தேர்தலுக்கான இலகத்தினை வழங்கியுள்ளார்கள்….

இன்றோ நாளையோ தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்படபோகின்றது எப்படி இவர்ககள் இந்த தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பிக்க விடப்போகின்றார்கள்…

எனவே இது ஒரு இரகசிய தேர்தலாக நடத்தப்போகின்றார்களா இருபதாயிரம் புலனாய்வாளர்கள் இறக்கப்பட்டுள்ளது என்று தகவல் கொடுக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி அவர்களால் புலனாய்வாளர்களுக்கான கடமை வழங்கப்பட்டுள்ளது…

இருபதாயிரம் புலனாய்வாளர்களை வைத்துக்கொண்டு மக்களிடையே ஒரு அடக்குமுறை தேர்தலை நடத்த முற்படுகின்றது இந்த அரசு
இலக்கங்கள் வழங்கப்பட்டுவிட்டன சுகாதார நடைமுறைகள் எப்படி கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று வர்த்தகமானி வந்துள்ளது அதில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது ஒரு பொதுஇடத்தில் 100 பேர் கூடுவதற்கும் தகுதி உண்டு இப்படி இருக்கும் போது எமது நினைவேத்தலை தடுத்தது சரியா???

எனவே இந்த அரசு செயற்படும் விதம் ஜனநாயகத்திற்கும் எமது மக்களின் வாழ்வியலுக்கும் எதிரானது என்பதை அடித்து சொல்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்,,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here