முல்லை துணுக்காய் பிரதேச மருதங்குளத்தை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!!

0
188

”முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான் கிராம அலுவலர் பிரிவில் உள்ள மருதங்குளம் கடந்த கால வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்தது”

இதனால் குறித்த குளத்தின் உடைய கலிங்கு பகுதியில் சுமார் அரைவாசி முற்றுமுழுதாக சேதமடைந்திருந்தது, இந்நிலையில் குறித்த குளத்தில் நீர் தேக்குவதற்காக கலிங்குக்கு மேலாக அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டுள்ளது..

இருந்த போதும் அந்த அணைக்கட்டு நிரந்தரமானது இன்மையால் நீரினை அதிகளவு தேக்க முடியாத துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது..

250 ஏக்கர் வரை விவசாயம் செய்யக்கூடிய நிலை இருக்கின்றபோதும் வழமையாக சிறுபோகம் 125 ஏக்கர் வரையில் செய்கை பண்ணப்பட்டுவந்தது, இம்முறை 6 அடி நீர் மாத்திரமே குளத்தில் உள்ளது இவ்வாறு நீர் பற்றாக்குறை காரணமாக 49 ஏக்கரில் மாத்திரமே இம்முறை சிறுபோகத்தில் நெற்செய்கைக்கு அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது..

இந்நிலையில் குறித்த குளத்தினுடைய கலிங்கி பகுதியை மிக விரைவாக புனரமைத்து வருகின்றன மார்கழிக்காவது அதிகளவான நீரைத் தேக்கினால் தொடர்ச்சியாக தங்களுடைய விவசா நடவடிக்கைகளை தங்கு தடையின்றி செய்ய முடியும், எனவும் குறித்த வேலைத்திட்டத்தை எதிர்வருகின்ற மாரி மழைக்கு முன்பதாக நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

இதேவேளை குறித்த பகுதியில் வயல் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் காட்டு யானைகளின் தாக்கத்தினால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்…

மாலை வேளையிலேயே வருகைதரும் யானைகளால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தங்களுக்கு குறித்த வயல் நிலங்களை சுற்றி யானை வேலி அமைத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறும் இந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here