புதுக்குடியிருப்பில் புலம்பெயர் நிதிப்பங்களிப்பில் இந்து மயானம்;பிரதேச சபையிடம் கையளிப்பு!

0
179

புணரமைப்பு செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு இந்து மயானம் பிரதேச சபையிடம் கையளிப்பு !

”முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு இந்து மயானம்” கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை என்ற அமைப்பினால் புணர்நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன..

புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றவர்களுடைய நிதிப் பங்களிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டு வந்த இந்த இந்து மயானமானது இன்றைய தினம் (13) உத்தியோகபூர்வமாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது…

சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த இந்து மயானத்தினை புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது..

புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் தலைவர் பொ .பேரின்பநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு சி. ஜெயகாந் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர்,,, த .தயாளன் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உடைய திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ப.சத்தியரூபன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ச.கிரிசாந்தன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் உடைய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்..

நிகழ்வில் உத்தியோகபூர்வமாக இதனுடைய ஆவணங்களை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உடைய திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி ப.சத்தியரூபன் ஆகியோர் கையளிக்க புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ச.கிரிசாந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்…

தொடர்ந்து இந்து மயானத்திற்கு சென்ற உத்தியோகத்தர்கள் மயானத்தின் உடைய சாவியினை பிரதேச சபையின் தவிசாளர் செயலாளர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்…

குறித்த செயற்றிட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் உடைய உறுப்பினர்கள் நிதியுதவி செய்த புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற உறவுகளுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு சி. ஜெயகாந் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here